Freshtamil.com - It's time to get updates about tamil vidukathaigal, kids stories, tamil names, auspicious dates, health tips, news & more. Everything in Tamil.

, , , , , , , ,

50+ தமிழ் விடுகதைகள் விடையுடன் தமிழில் 2020

தமிழ் விடுகதைகள் படிக்கும் பொழுது மனதில் ஒரு சந்தோசம் மற்றும் ஆர்வம் அந்த விடுகதைகளை உங்கள் குழந்தைக்கு சொல்லி மகிழுங்கள் தமிழ் பன்பை வளருங்கள்.

தமிழ் விடுகதைகள் படிக்க அதிகம் ஆர்வம் கொண்டு இருப்பீர்கள் உங்கள் குழந்தைக்கு விடுகதைகள் சொல்லி இந்த விடுமுறை நாட்களில் மகிழ்ச்சியை பகிருங்கள். தமிழ் விடுகதைகள் அண்டைய களங்களில் குழந்தை அறிவை வளர்க்க விடுகதைகள் சொல்லி வளர்ப்பார்கள் இந்த தலைமுறை மக்களும் அதை பின் பற்றலாமே.தமிழ் விடுகதைகள் விடை
அள்ள முடியும்; ஆனால் கிள்ள முடியாது - அது என்ன?தண்ணீர்
அண்டை வீட்டில் குடியிருப்போம் அக்காள் தங்கை நாங்கள்; கிட்டகிட்ட இருந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டோம் - அது என்ன?கண்கள்.
அம்பலத்தில் ஆடுகிற அழகுப் பொண்ணுக்கு அங்கமெல்லாம் தங்கக் கண்ணாடி - அது என்ன?மயில்.
அம்மா சும்மா படுத்திருப்பாள் மகள் முன்னும் பின்னும் - அது என்ன?அம்மியும் குழவியும்.
அள்ளவும் முடியாது; கிள்ளவும் முடியாது - அது என்ன?காற்று.
ஆலமரம் தூங்க, அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை - அது என்ன?மூக்கு
ஆள் இறங்காத கிணற்றிலே மரம் இறங்கிக் கூத்தாடுது - அது என்ன?தயிர் கடையும் மத்து.
உச்சிக் கிளையிலே ஒரு முழக் குச்சி ஊசலாடுது - அது என்ன?முருங்கைக்காய்.
உலகுக்கெல்லாம் ஒரே துப்பட்டி - அது என்ன?வானம்
உள்ளே இருந்தால் ஓடித் திரிவான்; வெளியில் வந்தால் விரைவில் மடிவான் - அது என்ன?மீன்
எண்ணும் முள்ளும் இல்லாத கடிகாரம் எவராலும் பார்க்க இயலாத கடிகாரம் - அது என்ன?இதயம்.
ஏழை படுக்கும் பாய்; எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை - அது என்ன?பூமி.
ஒரு குருவிக்கு ஒரே கால்; நாலு இறக்கை - அது என்ன?அரைக்கீரை.
ஒல்லியான மனிதனுக்கு ஒரே காது - அது என்ன?ஊசி.
ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி - அது என்ன?பூண்டு .
ஓட்டுத் திண்ணையில் பட்டுப் புடவை - அது என்ன?மூக்குத்தி
கண் இல்லாத நான், பார்வையிழந்தவர்க்குப் பாதை கேட்டேன் - அது என்ன?கைத்தடி.
கண் சிமிட்டும் ஒன்று; மணி அடிக்கும் மற்றொன்று; கண்ணீர் வடிக்கும் இன்னொன்று - அது என்ன?மின்னல், இடி, மழை
கத்திபோல் இலை இருக்கும் கவரிமான் பூப்பூக்கும், தின்னப்பழம் பழுக்கும், தின்னாத காய் காய்க்கும் - அது என்ன?வேப்பமரம்
கள்ளனுக்குக் காவல் காற்றுக்குத் தோழன் - அது என்ன?ஜன்னல்
காசியிலிருந்து கல்கத்தாவரை ஆடாமல் அசையாமல் போகிறது - அது என்ன?தண்டவாளம்.
காது பெரிசு; கேளாது - அது என்ன?அண்டா
காலில்லாத பந்தல் காணக் காண விநோதம் - அது என்ன?வானம்.
காலையில் நான்கு கால்; கடும்பகலில் இரண்டு கால்; மாலையில் மூன்று கால்; முடிவிலே எட்டுக்கால் - அது என்ன?தவழும் குழந்தை , நடக்கும் இளைஞன், தடியுடன் கிழவர்.தூக்கிச் செல்லும் நால்வர்.
கிணற்றைச் சுற்றி வெள்ளைக் கல் - அது என்ன?பல்.
கையிலே கர்ணம் போடும் கணக்குப் பிள்ளை யார்?நாற்காலி.
கையிலே கர்ணம் போடும் கணக்குப் பிள்ளை யார்? - அது என்ன?அளக்கும் படி.
கொக்கு நிற்க நிற்க; குளம் வற்ற வற்ற - அது என்ன?எண்ணெய் விளக்கு
சிறுசிறு கதவுகள்: செய்யாத கதவுகள் திறக்க அடைக்க சத்தம் செய்யாக் கதவுகள் - அது என்ன?கண் இமைகள்
சின்ன மச்சான் - என்னைக் குனிய வச்சான் - அது என்ன?முள்.
சின்னப் பையனும் சின்னப் பெண்ணும் சேர்ந்து கட்டின மாலை அதை சிக்கில்லாமல் அவிழ்ப்பவர்க்குச் சென்னைப் பட்டினம் பாதி - அது என்ன?தூக்கணாங் குருவிக் கூடு.
சூடுபட்டு சிவந்தவன் வீடுகட்ட உதவுவான் - அது என்ன?செங்கல்.
தாளைக் கொடுத்தால் தின்னும்; தண்ணீர் குடித்தால் மடியும் - அது என்ன?நெருப்பு.
நித்தம் கொட்டும்; சத்தம் இல்லை - அது என்ன?கண் இமை
நிலத்திலே முளைக்காத புல்-அது நிமிர்ந்து நிற்காத புல் - அது என்ன?தலைமயிர்.
நூல் நூற்கும்; இராட்டை அல்ல ஆடை நெய்யும்; தறியும் அல்ல - அது என்ன?சிலந்தி.
பக்கத்திலுள்ள பட்டணத்தைப் பார்க்க முடியவில்லை - அது என்ன?முதுகு.
பட்டையைப் பட்டையை நீக்கி, பதினாறு பட்டையை நீக்கி, முத்துப் பட்டையை நீக்கி, முன்னே வாராள் சீமாட்டி - அது என்ன?வாழைப்பூ
பார்த்தால் கல்தான்; பல்பட்டால் தண்ணீர் தான் - அது என்ன?பனிக்கட்டி.
பொழுது சாய் ந்தால் பூந்தோட்டம்; விடிந்து பார்த்தால் வெறுத் தோட்டம் - அது என்ன?வானம்.
மஞ்சள் சட்டை மாப்பிள்ளை மண மணக்கிறார் வீட்டிலே - அது என்ன?எலுமிச்சம்பழம்.
மண்ணுக்குள்ளே இருக்கும் மாயாண்டி, உரிக்க உரிக்கத் தோலாண்டி - அது என்ன?வெங்காயம்.
முகத்திலே காட்டுவான்; முதுகிலே காட்டமாட்டான் - அது என்ன?முகம் பார்க்கும் கண்ணாடி
முதுகெல்லாம் கூனல்; வயிறெல்லாம் பல், முள்ளு வேலியும் தாண்டி, மூங்கில் வேலியும் தாண்டி, உள்ளே சென்று பார்த்தால் ஒளிந்திருப்பான் சின்னப்பயல் - அது என்ன?கருக்கரிவாள்.
முன்னும் பின்னும் போவான் - ஆனால், ஒற்றைக் காலில் நிற்பான் - அது என்ன?கதவு.
வட்ட வட்டப் பாய்; வாழ்வு தரும் பாய்; ஊரெல்லாம் சுற்றும் பாய், ஒவ்வொருவரும் விரும்பும் பாய் - அது என்ன?ரூபாய்.
வண்ணான் வெளுக்காத வெள்ளை, குயவன் பண்ணாத பாண்டம், மழை பெய்யாத தண்ணீர் - அது என்ன?தேங்காய்.
வாலைப் பிடித்தால் வாயைப் பிளப்பான்; நெருப்பை விழுங்குவான்; விழுங்கிக் கக்குவான் - அது என்ன?குறடு
வெள்ளைக் குதிரையும் கறுப்புக் குதிரையும் மாறி மாறி ஓடும்; பிடிக்க முடியாது - அது என்ன?பகலும் இரவும்.

கிட்ஸ் ஸ்பெஷல் விடுகதைகள் - 15+ Tamil Vidukathaigal with Answers for Kids

Share:

No comments:

Post a Comment