Wide list of 30+ tamil vidukathai with answers. Have more fun by sharing vidukathai with your friends and kids. Here you go 30+ comedy vidukathai:
- அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான். அவன் யார்?
விடை:பந்து - கீழேயும் மண்ணு மேலேயும் மண்ணு நடுவிலே அழகான பொண்ணு அது என்ன?
விடை:மஞ்சள் - தண்ணீரிலே நீந்தி வருவான் தரையிலே தாண்டிவருவான் அவன் யார் ?
விடை:தவளை - குண்டு முழி ராஜாவுக்கு. குடல் எல்லாம் பற்கள? அது என்ன?
விடை:மாதுளை - விழுந்தால் படுக்காது எழுந்தால் நிற்காது. அது என்ன?
விடை:தலையாட்டி பொம்மை - யாரும் ஏற முடியாத மரம். கிளைகள் இல்லாத மரம். அது என்ன மரம்?
விடை:வாழை - கோணலாக இருந்தாலும் குணமும்சுவையும் குன்றாது. அது என்ன?
விடை:கரும்பு - விட்டம் போட்டு வீடு கட்டியும் விசிறி மாட்ட இடம் இல்லை. அது என்ன?
விடை:மூக்கு - பொட்டுப் போல் இலை இருக்கும் குச்சிபோல காய் காய்க்கும்.அது என்ன?
விடை:முருங்கை - ஆயிரம் அறைகள் கொண் பிரம்மாண்டமான மிட்டாய்க்கடை. அது என்ன?
விடை:தேன் கூடு - மூன்று பெண்களுக்கும் ஒரே முகம்…மூத்தப் பெண் ஆற்றிலே, நடுப் பெண் காட்டிலே, கடைசிப் பெண் வீட்டிலே! அவர்கள் யார்?
விடை:முதலை, உடும்பு, பல்லி. - கூட்டுக்குள்ளே குடியிருக்கும் குருவியும் அல்ல. பாய்ந்து செல்லும் புலியும் அல்ல. எதிரியை கொல்லும் வீரனும் அல்ல அது என்ன?
விடை:அம்பு - சின்னத் தம்பி, குனிய வச்சான். அது என்ன?
விடை:முள் - உதை வாங்கி, உதை வாங்கி ஊருக்கு சேதி சொல்வான் – அவன் யார்?
விடை:தண்டோரா - வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும் வீரன். போருக்கு போகாத வீரன். அவன் யார் ?
விடை:ஆமை - பூ பூக்கும். காய் பூ காய்க்கும். ஆனால் பழம் பழுக்காது. அது என்ன ?
விடை:தேங்காய் - பார்த்தால் கல். பல் பட்டால் நீர். அது என்ன?
விடை:பனிக்கட்டி - திரி இல்லாத விளக்கு உலகம் எல்லாம் தெரியும். அது என்ன?
விடை:சூரியன் - அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
விடை:தண்ணீர் - வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?
விடை:கத்தரிக்கோல் - அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
விடை:நாக்கு - ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக் கிடப்பாள் அவள் யார் ?
விடை:துடைப்பம் - ஆயிரம் தச்சர் கூடி அழகான் மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம் அது என்ன?
விடை:தேன்கூடு - படுத்துத் தூங்கினால் கண்முன் ஆடும் அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும் அது என்ன?
விடை:கனவு - விரல் இல்லாமலே ஒரு கை அது என்ன?
விடை:உலக்கை - தன் மேனி முழுதும கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள்
விடை:மீன் வலை - அரசன் ஆளாத கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன், இரவுக் காவல் காரன் ஒருவன் அவர்கள் யார்?
விடை:சூரியன், சந்திரன் - நான் பார்த்தால் அவன் பார்ப்பான், நான் சிரித்தால் அவன் சிரிப்பான் அவன் யார்?
விடை:கண்ணாடி - கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும் தான் ?
விடை:வெங்காயம் - கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
விடை:கரும்பு - வாயிலே தோன்றி வாயிலே மறையும் அது என்ன?
விடை:சிரிப்பு - ஏரியில் இல்லாத நீர், தாகத்திற்கு உதவாத நீர் தண்ணீர் அல்ல அது என்ன?
விடை:கண்ணீர் - கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?
விடை:மெழுகுவர்த்தி
This is not a joke you need to improve please