தமிழ் விடுகதைகள் விடையுடன்

தமிழ் விடுகதைகள் விடையுடன் 2021

தமிழ் விடுகதைகள் விடையுடன் கீலே அளித்து உள்ளோம்.விடுகதைகள் உங்கள் குழந்தைகள் அறிவு ஆற்றல் நன்றாக வளர்க்கும். குழந்தைகள் மற்றும் அல்லாமல் பெரியவர்களுக்கும் நல்ல பொழுது போக்கு விடுகதைகள் படிப்பது. இப்போது உள்ள மாடர்ன் காலகட்டத்தில் நாம் விடுகதைகள் படிப்பதை மறந்து விடுகிறோம்.

தமிழ் விடுகதைகள் உள்ள பல நல்ல விஷயங்கள், அறிவு ஆற்றல் வளர்க்க கூடிய பல நல்ல விடுகதைகள் உள்ளனர். நாங்கள் பல நல்ல விடுகதைகள் ஒரு தொகுப்பாக இங்கேய கொடுத்து உள்ளோம். தமிழ் விடுகதைகள் விடையுடன் படித்து மகிழுங்கள்

 1. விடுகதை: ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன?
  விடை:பற்கள்
 2. விடுகதை: ஊரெல்லாம் ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான் அவன் யார் ?
  விடை:செருப்பு
 3. விடுகதை: வெள்ளை ராஜாவுக்கு கறுப்பு உடை அது என்ன?
  விடை:உளுந்து
 4. விடுகதை: தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன?
  விடை:முதுகு
 5. விடுகதை: பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்?
  விடை:சீப்பு


 6. விடுகதை: காற்றைக் குடித்து காற்றில் பறப்பான். அவன் யார்?
  விடை:பலூன்
 7. விடுகதை: வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன?
  விடை:பொக்கை
 8. விடுகதை: அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள் அது என்ன?
  விடை:அம்மி குள்வி
 9. விடுகதை: பச்சை நிற அழகிக்கு உதட்டுச்சாயம் பூசாமலே சிவந்தவாய் அவள் யார்?
  விடை:கிளி
 10. விடுகதை: வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி அவர்கள் யார் ?
  விடை:பூட்டும் சாவியும்
 11. விடுகதை: உயிரில்லாதவனுக்கு உடம் பெல்லாம்-நரம்பு அது என்ன ?
  விடை:பாய்
 12. விடுகதை: அடிக்காமல் திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார் ?
  விடை:வெங்காயம்
 13. விடுகதை: கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான் அவன் யார்?
  விடை:பாம்பு


 14. விடுகதை: முள்ளுக்குள்ளே முத்துக்குவலம் அது என்ன?
  விடை:பலாப்பழம்
 15. விடுகதை: முக்கண்ணன் சந்தைக்குப்போகின்றான அவன் யார் ?
  விடை:தேங்காய்
 16. விடுகதை: பட்டுப்பை நிறைய பவுன் காசு அது என்ன ?
  விடை:மிளகாய்
 17. விடுகதை: தலையைச் சீவினால் தாளிலே மேய்வான் அவன் யார்?
  விடை:பென்சில்
 18. விடுகதை: வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல் அது என்ன ?
  விடை:முட்டை
 19. விடுகதை: ஒருவனுக்கு உணவளித் தால் ஊரையே கூட்டுவான். அவன் யார் ?
  விடை:காகம்
 20. விடுகதை: உடல் சிவப்பு, வாய் அகலம் உணவு காகிதம் நான் யார்?
  விடை:அஞ்சல் பெட்டி
 21. விடுகதை: பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?
  விடை:கண்கள்
 22. விடுகதை: அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
  விடை:நிலா


 23. விடுகதை: ஆலமரம் தூங்க அவனியெல் லாம் தூங்க, ஸ்ரீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
  விடை:இதயம்
 24. விடுகதை: ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன?
  விடை:ஊதுபத்தி
 25. விடுகதை: மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன?
  விடை:பஞ்சு
 26. விடுகதை: பிறக்கும்போது வால் உண்டு இறக்கும் போது வால் இல்லை அது என்ன?
  விடை:தவளை
 27. விடுகதை: ஒரு குகை, 32 வீரர்கள். ஒரு நாகம், அந்த குகை எது?
  விடை:வாய்
 28. விடுகதை: நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான் அவன் யார் ?
  விடை:நாற்காலி
 29. விடுகதை: மரத்தின் மேலே தொங்குது மலைப்பாம்பல்ல. அது என்ன?
  விடை:விழுது
 30. விடுகதை: முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது,படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?
  விடை:நட்சத்திரங்கள்

உங்களுக்கு பிடித்தமான விடுகதைகளை கமெண்ட் பண்ணவும்.

1 thought on “தமிழ் விடுகதைகள் விடையுடன் 2021”

 1. எனக்கு படிப்பதற்கு நல்ல உதவியாக இருந்தது
  மிகவும் நன்றி

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!