தமிழ் படிக்கும் குழந்தைகளுக்காக ஸ்பெஷல் விடுகதைகள் தமிழில். உங்கள் குழந்தைகள் மூளை வளர்ச்சியை ஆத்திகரிக்க ஒரு அறிய வாய்ப்பு. இங்கு உள்ள விடுகதைகள் விடையுடன் அளித்துள்ளோம் உங்கள் குழந்தைகள் இடம் கேட்டு மகிழுங்கள். உங்களுக்கு புடித்த விடுகதை அல்லது புதிய விடுகதை கீலே கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் பண்ணவும்.
Serial Number | தமிழ் விடுகதைகள் | விடை |
---|---|---|
1 | படுத்துத்தூங்கினால் கண்முன் ஆடும்; அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும். | கனவு |
2 | ஒற்றைக்காலில் காலில் சுற்றுவான் ஓய்ந்து போனால் படுத்து விடுவான் | பம்பரம். |
3 | கடிவாளம் போட்டால் காலிலே கிடக்கும். | செருப்பு. |
4 | ஒரு பானைச் சோறு வடித்து, ஓராயிரம் பேருக்குப் போட்டு, இன்னும்கூட மிச்சமிருக்கு. | சுண்ணாம்பு. |
5 | மடக்காமல் பறக்குதே, அது என்ன மந்திரி ? சிமிட்டாமல் விழிக்குதே, அதுதான் அரசே. | தட்டாரப் பூச்சி. |
6 | ஒல்லியான மனிதன் ; ஒரே காது மனிதன், அவன் காது போனால், ஏது பயன்? | ஊசி. |
7 | நீரிலே கொண்டாட்டம்; நிலத்திலே திண்டாட்டம் | மீன். |
8 | சின்னஞ் சிறு வீட்டில் சிப்பாய்கள் பல பேர் | தீக்குச்சி. |
9 | கோயிலைச் சுற்றிக் கறுப்பு; கோயிலுக்குள்ளே வெளுப்பு | சோற்றுப் பானை. |
10 | பச்சைக் கதவு, வெள்ளை ஜன்னல், கறுப்பு ராஜா. | சீத்தாப்பழம். |
11 | நடக்க முடியாது: ஆனால் நகராமல் இருக்காது. அது என்ன? | கடிகாரம். |
12 | முதுகை அமுக்கினால் மூச்சு விடுவான் பல்லை அழுத்தினால் பாட்டுப் பாடுவேன் | ஆர்மோனியம். |
13 | அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி. பாதி நாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள். | நிலா. |
14 | ஏணிமேலே கோணி; கோணி மேலே குழாய்; குழாய் மேலே குண்டு; குண்டு மேலே புல்லு; புல்லு மேலே பூச்சி. | மனிதனின் கால், வயிறு, கழுத்து, தலை, மயிர், பேன். |
15 | மொட்டைப் பாட்டிக்கு, முழுகத் தெரியாது. | வெண்ணெய். |
16 | ஐந்து அடுக்கு; நாலு இடுக்கு | விரல்கள். |
17 | கிணற்றைச் சுற்றிப் புல். | கண் புருவம். |
18 | சாண் உயரப் பையன், வைத்ததெல்லாம் சுமப்பான். | அடுப்பு. |
19 | பட்டணத்தில் இருந்து இரண்டு சிராய் கொண்டு வந்தேன். ஒன்று எரியுது; இன்னொன்று புகையுது . | சூடம், சாம்பிராணி. |
20 | அக்கா சப்பாணி. தங்கை நாட்டியக்காரி. | உரல், உலக்கை . |
21 | அரைச் சாண் குள்ளனுக்குக் கால் சாண் தொப்பி. | பேனா. |
22 | உயிரில்லை ; ஊருக்குப் போவான். காலில்லை; வீட்டுக்கு வருவேன் வாயில்லை ; வார்த்தைகள் சொல்வான். | கடிதம். |
23 | நிலத்தை நோக்கி வருவான்; நுரையைக் கக்கிச் செல்வான். | கடல் அலை |
24 | அன்னதான மண்டபத்தில் அழகான குருவி. அழகான குருவிக்கு முழம் நீளம் வால்! | அகப்பை . |
25 | என் தாயோ கடல்; தந்தையோ சூரியன்; என்னை விரும்பாத விடே இல்லை. | உப்பு |
26 | தம்பிக்கு எட்டும்; அண்ணனுக்கு எட்டாது. | உதடு, தம்பி என்று சொல்லும் போது கீழ் உதடு மேல் உதட்டை தொடும். அண்ணன் என்னும்போது தொடாது. |
27 | அறைகள் அறுநூறு; அத்தனையும் ஓர் அளவு. | தேன் கூடு. |
28 | உருவம் இல்லாதவன்; சொன்னதைத் திருப்பிச் சொல்வான். | எதிரொலி. |
29 | குளித்தால் கறுப்பு; குளிக்காவிட்டால் சிவப்பு. | நெருப்பு |
30 | நட்டமாய் நிற்கிறவனுக்கு நறுக்கு நறுக்கென்று கடிக்கிற வேலை. | அரிவாள்மனை. |
31 | தாய் இனிப்பாள்; மகள் புளிப்பாள்; பேத்தி மணப்பாள். | பால், மோர், நெய். |
32 | உண்டதை நினைப்பான், உதையை மறப்பான், உயிரையும் கொடுப்பான், வழியும் நடப்பான். | நாய். |
33 | காலையில் ஊதும் சங்கு; கறி சமைக்க உதவும் சங்கு. | சேவல். |
34 | கறுப்புச் சட்டைக்காரன்; காவலுக்குக் கெட்டிக்காரன். | பூட்டு . |
35 | தொட்டால் மணக்கும்; குடித்தால் புளிக்கும். | எலுமிச்சம்பழம். |
36 | நடக்கத் தெரியாதவன் நடப்பவனுக்கு வழி காட்டுகிறான். | கைகாட்டி |
37 | ஏரிக்கரை உயர்ந்திருக்கும், எட்டிப் பழம் சிவந்திருக்கும், காகம் கறுத்திருக்கும், காக்கைக் குஞ்சு வெளுத்திருக்கும். | அடுப்பு, நெருப்பு, கரி, சோறு. |
38 | இரவிலே பிறந்த இளவரசனுக்குத் தலையிலே குடை. | காளான். |
39 | உலர்ந்த கொம்பிலே விரிந்த பூ – அது என்ன? | குடை. |
40 | ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. | வெங்காயம். |
41 | ஆகாயத்திலிருக்கும் அற்புத மனிதன் ஆற்றிலும் விழுவான்; குளத்திலும் விழுவான்; ஆனால் நனைய மாட்டேன் | சூரியன். |
42 | வெட்ட வெட்டத் தழைக்கும் பட்டணத்து வேம்பு, அது என்ன? | தலைமுடி. |
43 | சூரியன் காணாத கங்கை ; சுண்ணம் தோற்கும் வெள்ளை; மண்ணிற் பண்ணாத பாண்டம். | தேங்காய். |
44 | பறிக்கப் பறிக்க பெரிதாகும் அது என்ன? | குழி. |
45 | வட்ட வட்டச் சிமிழில் இட்டதெல்லாம் குட்டிப் பாம்பு. | இடியாப்பம். |
46 | தேய்க்கத் தேய்க்க நுரைக்கும் அடிக்க அடிக்க வெளுக்கும். | சோப்பு. |
47 | எட்டாத கொம்பில் மிட்டாய்ப் பொட்டலம். | தேன் கூடு. |
48 | மொட்டை மாடு உட்கார்ந்திருக்கிறது மூக்கணாங்கயிறு மேய்ந்து வருகுது. | பூசணிக்காயும் அதன் கொடியும். |
49 | வராதிருந்து வந்தேன்; வந்துவிட்டுப் போனேன்; போன பிறகு வந்தேன்; இனிப் போனால் வரமாட்டேன். நான் யார் ? | பல். |
Check Related post section below for 1000+ Tamil vidukathaigal with answers in tamil.
March 26, 2021 at 3:11 am
Good vere level
April 21, 2021 at 3:32 am
Arakai arakai karitiduvan uruke vasanai taruvan
May 12, 2021 at 3:43 am
Good question
August 13, 2021 at 6:22 pm
Very nice interested vidukathai Kal
September 11, 2021 at 9:35 am
Very nice interested and good question