பிரெஷ் தமிழ் ப்லோக் வந்ததுக்கு நன்றி உங்களுக்காக தமிழ் விடுகதைகள் விடையுடன் கீலே அளித்து உள்ளோம். உங்களுக்கு புடித்தமான தமிழ் விடுகதை உங்கள் குழந்தை செல்வங்களுக்கு குறி மகிழ்ச்சி படுத்துங்கள்

தமிழ் விடுகதைகள் 400 with Answer – Tamil Vidukathaigal

தமிழ் விடுகதைகள் விடை
மண்ணுகுளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் மஞ்சள்
தொப்பி போட்ட காவல்காரன், உரசி விட்டால் சாம்பல் ஆவான் தீக்குச்சி
ஊர் சுற்ற கூட வருவான் ஆனால் வீட்டுக்குளே வரமாட்டன் செருப்பு
ஏழு குதிரை பூட்டிய தேரில் வரும் மன்னவன் சூரியன்
தொட்டு விட்டால் ஏதும் இல்லை அரைத்து விட்டால் சிவந்துடுவான் மருதாணி
பாட்டி விட்டு தோட்டத்தில் தொங்குகின்ற பாம்புகள் புடலங்காய்
சொன்னதை சொல்லும் பொண்ணுக்கு, பச்சை பாவாடை கேட்குதாம் பச்சைக்கிளி
கீலே ஊற்றிய தண்ணீர் மேலே தொங்கி இனிக்குது இளநீர்
சேற்றுக்குள்ளேய வாள்பவனுக்கு ஆகாசத்தில் நண்பனாம் தாமரை சூரியன்
வண்ண பட்டு சேலைக்காரி, நீல பட்டு ரவுக்கைக்காரி மயில்
உரச உரச குழைவான், பூசப் பூச மனப்பான் சந்தனம்
கிண்ணம் போல் பூ பூக்கும், பானை போல் காய் காய்க்கும் பூசணிக்காய்
கரைந்து போகுது வெள்ளி தட்டு தேய் பிறை நீல
விடிய விடிய வேலை செய்பவனுக்கு ஒரு கை சின்னதாம் கடிகாரம்
மூவராய் சேர்வார்கள் வண்ணம் தீட்டுவார்கள் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு
Top Comedy Tamil Vidukathaigal with Answers – நகைச்சுவை விடுகதைகள்

 1. விடுகதை: முள்ளுக்குள்ளே முத்துக்குவலம் அது என்ன?
  விடை:பலாப்பழம்
 2. விடுகதை: முக்கண்ணன் சந்தைக்குப்போகின்றான அவன் யார் ?
  விடை:தேங்காய்
 3. விடுகதை: பட்டுப்பை நிறைய பவுன் காசு அது என்ன ?
  விடை:மிளகாய்
 4. விடுகதை: தலையைச் சீவினால் தாளிலே மேய்வான் அவன் யார்?
  விடை:பென்சில்
 5. விடுகதை: வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல் அது என்ன ?
  விடை:முட்டை 6. விடுகதை: ஒருவனுக்கு உணவளித் தால் ஊரையே கூட்டுவான். அவன் யார் ?
  விடை:காகம்
 7. விடுகதை: உடல் சிவப்பு, வாய் அகலம் உணவு காகிதம் நான் யார்?
  விடை:அஞ்சல் பெட்டி
 8. விடுகதை: பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?
  விடை:கண்கள்
 9. விடுகதை: அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
  விடை:நிலா

You May Also Like: 50+ தமிழ் விடுகதைகள் விடையுடன்
Top Kids Special Tamil Vidukathai with Answers – குழந்தை விடுகதைகள்

 1. விழுந்தால் படுக்காது எழுந்தால் நிற்காது. அது என்ன?
  விடை:தலையாட்டி பொம்மை
 2. யாரும் ஏற முடியாத மரம். கிளைகள் இல்லாத மரம். அது என்ன மரம்?
  விடை:வாழை
 3. கோணலாக இருந்தாலும் குணமும்சுவையும் குன்றாது. அது என்ன?
  விடை:கரும்பு 4. விட்டம் போட்டு வீடு கட்டியும் விசிறி மாட்ட இடம் இல்லை. அது என்ன?
  விடை:மூக்கு
 5. பொட்டுப் போல் இலை இருக்கும் குச்சிபோல காய் காய்க்கும்.அது என்ன?
  விடை:முருங்கை
 6. ஆயிரம் அறைகள் கொண் பிரம்மாண்டமான மிட்டாய்க்கடை. அது என்ன?
  விடை:தேன் கூடு
 7. மூன்று பெண்களுக்கும் ஒரே முகம்…மூத்தப் பெண் ஆற்றிலே, நடுப் பெண் காட்டிலே, கடைசிப் பெண் வீட்டிலே! அவர்கள் யார்?
  விடை:முதலை, உடும்பு, பல்லி.
 8. கூட்டுக்குள்ளே குடியிருக்கும் குருவியும் அல்ல. பாய்ந்து செல்லும் புலியும் அல்ல. எதிரியை கொல்லும் வீரனும் அல்ல அது என்ன?
  விடை:அம்பு

You May Also Like: 15+ Tamil Vidukathaigal with Answers for Kids
New Riddles in Tamil with Answers – தமிழ் விடுகதைகள்

 1. அள்ளவும் முடியாது; கிள்ளவும் முடியாது – அது என்ன?
  விடை:காற்று
 2. ஆலமரம் தூங்க, அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை – அது என்ன?
  விடை:மூக்கு
 3. ஆள் இறங்காத கிணற்றிலே மரம் இறங்கிக் கூத்தாடுது – அது என்ன?
  விடை:தயிர் கடையும் மத்து. 4. உச்சிக் கிளையிலே ஒரு முழக் குச்சி ஊசலாடுது – அது என்ன?
  விடை:முருங்கைக்காய்.
 5. உலகுக்கெல்லாம் ஒரே துப்பட்டி – அது என்ன?
  விடை:வானம்
 6. உள்ளே இருந்தால் ஓடித் திரிவான்; வெளியில் வந்தால் விரைவில் மடிவான் – அது என்ன?
  விடை:மீன்
 7. எண்ணும் முள்ளும் இல்லாத கடிகாரம் எவராலும் பார்க்க இயலாத கடிகாரம் – அது என்ன?
  விடை:இதயம். 8. ஏழை படுக்கும் பாய்; எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை – அது என்ன?
  விடை:பூமி.
 9. ஒரு குருவிக்கு ஒரே கால்; நாலு இறக்கை – அது என்ன?
  விடை:அரைக்கீரை.